வளையல் அலங்காரத்தில் கோமதி அம்மன்

மதுரை மேலூர் அருகே சிவாலயத்தில் உள்ள கோமதி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது;

Update: 2025-07-28 09:00 GMT
மதுரை மேலூர் தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா இன்று (ஜூலை .28) தொடங்கியது. இன்று காலை 05:00 மணிக்கு, யாகசாலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு, பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி, விரதத்தை துவங்கினார்கள். இன்று (ஜூலை .28) ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோமதி அம்மனுக்கு, பல வண்ணங்களில், வளையல்கள் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். சங்கரலிங்கம் சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News