திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய சரகத்தில் நேற்று ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் ரோந்து பணியின்போது ரயில்வே குடோன் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற மணிகண்டன் (28) என்பவரிடம் சோதனை செய்தபோது 10.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்தனர்.