ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கி தத்தளித்த காட்டுயானை – வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்!
ஆற்றில் நீர் வேகமாக ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், காட்டுயானை எதிர்பாராதவிதமாக ஆற்றில் இறங்கி உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகியுள்ளது.;
வால்பாறை, அதிரப்பள்ளி பகுதியில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் நீர் வேகமாக ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், ஒரு காட்டுயானை எதிர்பாராதவிதமாக அந்த ஆற்றில் இறங்கியது. வெள்ளத்தில் சிக்கிய யானை, கடும் நீர் ஓட்டத்தில் தத்தளித்து நீந்தி உயிர் தப்பிக்க முயற்சித்தது. பலநிமிடங்களுக்கு நீரில் போராடிய யானை, அப்பால் கரையை எட்டியது. இந்த அதிர்ச்சிகரமான மற்றும் மனதை தொட்ட காட்சி அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. யானையின் உயிர்வாதைக் கண்டு பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். காட்டுயானைகளின் இயற்கை வாழ்விடம் பாதிக்கப்படுவதால் அவை இவ்வாறு ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்வது தற்போது மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.