கோவை: வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம் !

கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் வீட்டு கழிவுப்பொருட்கள் சேகரிப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.;

Update: 2025-07-29 07:08 GMT
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில், பழைய படுக்கைகள், மெத்தைகள், சோபாக்கள், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பெரிய வீட்டு கழிவுப்பொருட்களை சேகரிக்க ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து இந்த பொருட்களை வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கலாம். தெருவோரம் அல்லது காலி இடங்களில் கழிவுகள் வீசாமல், இந்த முகாமைப் பயன்படுத்துமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. சேகரிப்பு மையமாக வார்டு அலுவலகங்களும் மண்டல அலுவலகங்களும் செயல்படும். மேலும் விவரங்களுக்கு மண்டல உதவி எண்கள் மற்றும் www.ccmc.gov.in இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என கோயம்புத்தூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News