சூலூர் அருகே கார் - பேருந்து மோதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம் !

சூலூர் புறவழிச்சாலையில் கார் மற்றும் பேருந்து மோதிய விபத்தில், காரை ஓட்டிய பாலகிருஷ்ணன் (வயது 35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

Update: 2025-07-29 07:13 GMT
கோவை சூலூர் புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை கார் மற்றும் பேருந்து மோதிய விபத்தில், காரை ஓட்டிய பாலகிருஷ்ணன் (வயது 35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த சரவணகுமார் மற்றும் பேருந்து ஓட்டுநர் ரகுநாத் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின், பாலகிருஷ்ணன் மற்றும் சரவணகுமார் கேரளா திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு லாரியை முந்த முயன்ற நிலையில் எதிரே வந்த அரசு பேருந்துடன் கார் மோதியது. விபத்துக்குப்பின் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News