கோவை: சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !
தொழிலாளர் உரிமைக்காக கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.;
கோவை ஜில்லா சுமை தூக்கும் பொதுத்தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) மற்றும் கோவை செட்டிவீதி கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் கிளை சார்பில், பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைமுறையிலுள்ள கூலி வழங்கல், தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்த நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.