திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன், ஆட்சியர் சுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு நடைபெற்றது.