பெருங்குடி கொலை வழக்கில் ஆறு பேர் கைது.
மதுரை அருகே ஞாயிறு அன்று நடந்த படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் கடந்த ஞாயிறு மாலை கருமலை என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெருங்குடி கணேசுபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராம் மகன் சிவகுமார் என்ற கோழி சிவா ( 28) தனுஷ்கோடி மகன் முத்துமணி ( 35), முருகன் மகன் பாலமுருகன் (எ) சர்கரை பாலமுருகன் (28) மற்றும் பெருங்குடி பகுதியை சேர்ந்த கருப்பு மகன் தங்கமுத்து ( 17) ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.இந்நிலையில் நேற்று (ஜூலை.29) காலை வலையப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் கரையில் முகமது அல்தாப் மற்றும் சாய்ராம் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நிலையூர் அருகே உள்ள தோப்பு ஒன்றில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீசார் தோப்பில் பதுங்கி இருந்த சிவா, பாலமுருகன், முத்துமணி, தங்கமுத்து உள்பட நால்வரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதில் சாய்ராம் மற்றும் தங்க முத்து இவரும் 17வயது நிரம்பிய சிறார்கள என்பது குறிப்பிடத்தக்கது.