பிறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் குழந்தை பலி.

மதுரை உசிலம்பட்டி அருகே பிறந்து மூன்று நாட்கள் ஆன குழந்தை திடீர் மரணம் அடைந்தது;

Update: 2025-07-30 02:03 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராஜக்காபட்டியைச் சேர்ந்த ராஜா – ரியா தம்பதிக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று (ஜூலை.29) தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததை குழந்தை தூங்குவதாக நினைத்த தாய், நீண்ட நேரமாக அசைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார், விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறப்பில் சந்தேகம் இல்லை என உடற்கூறாய்வு செய்யாமலேயே உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்ய எடுத்து சென்ற சூழலில், செல்லும் வழியிலேயே குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்தாக மருத்துவமனைக்கு குழந்தையுடன் உறவினர் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மீண்டும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதன் பின்னர் சடலத்தை அடக்கம் செய்தனர்.

Similar News