கோவை: மாநகராட்சி முன்பு எஸ்.டி.பி.ஐ. போராட்டம் !
நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம்.;
கோவை மாநகராட்சியின் புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 82, 84, 86-வது வார்டுகளில் தெருநாய்கள் அதிகரித்து பொதுமக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், குழந்தைகள், பெரியோர்கள் பாதுகாப்பாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், நாய் கருத்தடை மையம் இடமாற்றம் செய்யப்படாவிட்டால் தெருநாய்களை பிடித்து மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்போம் என எச்சரித்தனர்.