திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதங்களில் மழை பெய்து அணைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து தாமிரபரணியில் தண்ணீர் அதிகமாக ஓடிய நிலையில் தற்பொழுது வெயிலின் காரணமாக தண்ணீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.