திருப்பூரில், நாளை பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு குறைகேட்பு கூட்டம்

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தகவல்;

Update: 2025-07-30 04:22 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறையின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் புதியதாக பெறப்படும் புகார்கள் தொடர்பான சிறப்பு பொது குறைகேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவினாசி காந்திநகரில் உள்ள ஆர்.கே. ஓட்டலில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி தலைமை தாங்குகிறார். எனவே சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக புகார் அளித்து தீர்வுகள் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News