திருநெல்வேலி முன்னாள் எம்பிக்கு நீதிமன்ற உத்தரவு
திருநெல்வேலி முன்னாள் எம்பி ஞானதிரவியம்;
மதபோதகர் காட்பிரே நோபில் தொடர்ந்த வழக்கில் திருநெல்வேலி முன்னாள் திமுக எம்பி ஞான திரவியம் மீதான வழக்கை ஆறு மாதத்தில் விரைந்து முடிக்க திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் எம்பி ஞான திரவியம் உள்ளிட்ட 13 பேர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.