அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உழவார திருப்பணி
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் உழவார திருப்பணி;
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் உழவார திருப்பணி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் இந்து கோவில்களை சுத்தம் செய்யும் முறை இறைப்பணி சார்பில் உழவார தூய்மை பனி நடைபெற்றது. இதில் அமைப்பின் நிர்வாகி கணேசன் தலைமையில் திருக்கயிலா வாத்தியங்கள் முழங்க திருமுறை ஈசனை சுமந்து திருமுறைகள் படி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி 300 க்கும் மேற்பட்டோர் அச்சிறுப்பாக்கம் நான்கு மாட வீதிகளில் பேரணியாக சென்றனர். கோவில் உட்பிரகாரம் வெளி பிரகாரம் சுத்தம் செய்தனர். குளத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்து உலக மக்கள் நலன் வேண்டி பன்னிருதிரு முறை பாராயணம்பாடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.