உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் , க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ;
வடமணிப்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம், வடமணிப்பாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திவடிவேல், ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ராஜசேகர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கோகுலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் மூலம் 46 வகையான சேவை திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.