இடைக்கழிநாடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு*;
இடைக்கழிநாடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்தா அய்யனார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த முகாமில் வருவாய்த்துற, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், விவசாயிகளுக்கு விதைப்பொருட்கள், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட அவைத் தலைவர் இணியரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ், அரசுத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.