வால்பாறை எஸ்டேட்களில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு !

வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களின் எஸ்டேட்களில் பருவமழைக்குப் பிறகு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.;

Update: 2025-07-30 14:23 GMT
வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களின் எஸ்டேட்களில் பருவமழைக்குப் பிறகு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கேரளாவிலிருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறையைச் சுற்றியுள்ள எஸ்டேட்களுக்கு யானைகள் தனித்தனி கூட்டமாக வந்துள்ளன. மார்ச் இறுதி வரை யானைகள் முகாமிடும் வாய்ப்பு உள்ளதால் வனத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை காட்டில் முகாமிட்டுள்ள யானைகள் இருக்கும் பகுதிகளில் தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், இரவு நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வந்தால் உடனடியாக தகவல் தரவும் வனத்துறையினர் அறிவுறுத்தினர். அத்துடன், யானைகளை சுற்றுலாப் பயணிகளோ, உள்ளூர் மக்களோ தொந்தரவு செய்யக் கூடாது என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.

Similar News