குடிநீரில் கலந்து வரும் சாக்கடை குறித்து மனு
44வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர்;
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 44வது வார்டுக்கு உட்பட்ட செய்குல் அக்பர் தெருவில் கடந்த 4 மாத காலமாக குடிநீரில் சாக்கடை கலந்து வருகின்றது. இது சரி செய்யப்பட்ட பின்னும் தொடர்ந்து சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளருக்கு 44வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர் நேற்று மனு அளித்துள்ளார்.