கல்வி வளர்ச்சி நாள் விழாவில் எம் எல் ஏ

மதுரை உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது;

Update: 2025-07-31 03:16 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் நேற்று (ஜூலை.30) கொண்டாடினார்கள். இவ்விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

Similar News