மேலூரில் மூவருக்கு குண்டாஸ்
மதுரை மேலூரில் மூன்று பேருக்கு குண்டாஸ் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்;
மதுரை மேலுார் அ.வல்லாளபட்டியை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் அதை ஊரைச் சேர்ந்த தீபன் ராஜுக்கு (25)பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 2ல் இருவரும் தனிமையில் இருந்த போது தீபன் ராஜின் நண்பர்கள் மதன் (25), திருமாறன் (24), வரவே மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மேலுார் மகளிர் காவல் ஆய்வாளர் காஞ்சனாதேவி கைது செய்தார். இந்த மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.