சேலத்தில் பிள்ளையார், மாரியம்மன் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு;
சேலம் அரிசிபாளையம் பகுதியில் சுளுக்கு பிள்ளையார், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் அஸ்தம்பட்டி பகுதியில் அமைச்சர் ராஜேந்திரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.