சேலம் கருப்பூர் மரக்கடை பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (வயது 27). இவர், அரசு என்ஜினீயரிங் கல்லூரி, மகளிர் தொழிற்பேட்டை பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அவர், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பூவரசனை சோதனை செய்த போது அவரது ஆடைக்குள் மறைத்து வைத்து இருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.