படகுகளில் கருப்புகொடி கட்டி மீனவர்கள் போராட்டம் 

முட்டம்;

Update: 2025-07-31 05:07 GMT
குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று முட்டம் கடற்கரை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு பங்கு நிர்வாக குழுவினர் தலைமை வைத்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார். அருட்ப பணியாளர் டங்ஸ்டன் விளக்க உரையாற்றினார். நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை பெர்லின் உட்பட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

Similar News