குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார இயங்கி வருகிறது. இது 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு வசதியுடன் இயங்கி வருகிறது. இன்று காலை 8 மணி வரை அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட இல்லாமல் இங்கு பணியில் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டினர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். டாக்டர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் சரியான நேரத்தில் வராததால் மாணவர்கள் காலையில் மருந்து வாங்க வந்தால் மருந்து வாங்க முடியாமல், அன்றைய தினம் பள்ளி செல்லாத நிலையில் இருந்து வருவதாக புகார்கள் உள்ளது. அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.