நெல்லை மாநகராட்சி 27வது வார்டு தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இதில் எந்தவித அடையாளமும் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வந்ததை தொடர்ந்து நேற்று இரவு 27வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் பகுதி செயலாளர் முத்துராஜ் ஏற்பாட்டில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.