கோவை: குற்றாலம் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறப்பு !
கோவை குற்றாலம் அதிக நீர் வரத்தால் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த நிலையில் இன்றிலிருந்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.;
கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராகியுள்ளதால் மீண்டும் பொதுமக்கள் அருவியைப் பார்க்கவும் நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.