கோவை: வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு
தாராபுரம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகரை சேர்ந்த மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம், சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் இடத்தை அளக்கச் சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.