திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்சிகள் சார்பில் நெல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களில் ஏராளமான பொதுமக்கள் மதியம் நேரங்களில் படையெடுத்து தாகம் தணித்து வருகின்றனர். இதனால் தண்ணீர் குறைய குறைய அதன் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பானைகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.