திருச்சி: மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட மெக்கானிக் திடீர் சாவு

தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2025-08-01 05:55 GMT
திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மகன் யாகாஷ் (21). மெக்கானிக்கான இவர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இரவு மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட யாகாசை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News