நெல்லை மாநகர மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் நாளை இஸ்ரேலிய சியோனிச அரசை கண்டித்து மாலை 4.30 மணியளவில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை நடத்துவது குறித்தான ஆலோசனை கூட்டம் இன்று மேலப்பாளையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டு போராட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.