கோவை புறநகரில் கனமழை: வெப்பம் தணிந்து மக்களிடையே மகிழ்ச்சி!

தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.;

Update: 2025-08-01 10:29 GMT
கடந்த மூன்று நாட்களாக கடும் வெயிலால் வாடிய கோவை புறநகர் பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தது. கருமத்தம்பட்டி, சோமனூர், கணியூர், மாதாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. மழையால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தங்குதடையின்றி வெளியே சுற்றிச் சென்றனர்.

Similar News