கோவை: காதலித்த பெண்ணை கொன்ற வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் சிறை!
காதலித்த பெண்ணை கொன்ற வழக்கில் கோவையை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு இரட்டை ஆயுள் சிறை விதிப்பு.;
கோவை கோயில்மேடு பகுதியைச் சேர்ந்த ருக்ஷனா காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மேட்டுப்பாளையத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார். கொலை வழக்காக மாற்றப்பட்ட இந்த வழக்கில், ருக்ஷனாவின் காதலர் பிரசாந்த், திருமணத்திற்கு மறுத்ததால், கல்லாறு பகுதியில் தூக்கி தள்ளி, கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் S. மோகன் பிரபு ஆஜராகி வாதமொழி நடத்தினார். இறுதியில், நீதிபதி சிவகுமார், பிரசாந்திற்கு IPC 302, 364 பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆயுள் சிறை தண்டனை மற்றும் IPC 201 பிரிவுக்காக ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.