கோவை: டிரம்ப் கருத்துகள் தொடர்பாக பிரதமர் ஏன் பதிலளிக்கவில்லை? – காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-08-01 10:37 GMT
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழுவினர் பங்கேற்று, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்துப் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, இந்தியா–பாகிஸ்தான் தொடர்பான ட்ரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். நம் நாட்டில் தலையிடுவதற்கு நீங்கள் யார்? என்று கேட்காமல் இருப்பதற்கும் காரணம் கூறவேண்டும் என்றார். அமெரிக்க அதிபருக்கும் போர் நிறுத்தத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று மோடி ஏன் கூற மறுக்கிறார்? ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு நேரடி பதில் தர வேண்டும் என்றும் தெரிவித்தார். சசிதரூரின் பேச்சு கட்சிக்குச் சீரழிவாக இருப்பதாகவும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், 2014ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் இதை வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். விசாரணையில் உயிரிழப்புகள் நடைபெறக்கூடாது எனவும், முதல்வர் நேர்மையாக செயற்படுகிறார் என்பதாலும் அவருக்கு காவல்துறை மூலம் எந்த தடையும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

Similar News