கன்னியாஸ்திரிகள் கைது: ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கட்சி;

Update: 2025-08-01 12:53 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொய் காரணம் கூறி கேரள மாநிலத்தை சேர்ந்த2 கன்னியாஸ்திரிகள் மற்றும் பழங்குடியினரை கைது செய்து சிறையில் அடைத்த அரசை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவில் வடசேரி எம்.ஜி.ஆர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணாத்துரை, எம்.அகமது உசைன், என்.எஸ்.கண்ணன், என்.உஷா பாசி, கே.தங்கமோகனன், ஆர்.ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அப்போது மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி பேசியதாவது, பிஜேபி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மதம் மாற்றம் செய்ததாகவும், பழங்குடி மக்களை கடத்தியதாகவும் பொய்யான காரணம் கூறி இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் பழங்குடியினரை கைது செய்து சிறையில் அடைத்ததை வன்மையாக கண்டிக்கிறோம். என கூறினார்.

Similar News