அம்மனின் கண்கள் வழியே காட்சியளிக்கும் திருவுருவம் – கோவையில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் !

கோவை ரத்தினபுரி கருமாரியம்மன் நாகலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆச்சரியமூட்டும் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது;

Update: 2025-08-02 06:24 GMT
கோவை ரத்தினபுரி கருமாரியம்மன் நாகலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆச்சரியமூட்டும் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. 44 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழாவின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு 10,008 வெள்ளி கண் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. முக்கியமாக, அம்மனின் உருவப்படத்தில் உள்ள கண்கள் வழியாக பைனாகுலர் தொழில்நுட்பம் மூலம் கர்ப்பகிரகத்தில் உள்ள அம்மன் சிலை தென்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது பக்தர்களிடையே பெரும் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. கோயில் தர்மகர்த்தா சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது, தமிழ்நாட்டில் இதுபோன்ற அனுபவம் எங்கும் இல்லையெனவும், இந்த அலங்காரத்தை காண பல இடங்களில் இருந்து பக்தர்கள் வந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Similar News