தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மென் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் இப்பயிற்சி வழங்கப்பட்டது. தன்னை அறிதல், நேர மேலாண்மை, இடம் அறிதல், நோக்கங்களை அறிந்து கொள்ளுதல், இலக்கை தீர்மானித்தல், தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ளுதல், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுதல், வாய்ப்பு அறிக்கை தயாரித்து முயற்சி செய்தல், முயற்சியை தொடர்ந்து செய்தல், தொடர் பயிற்சி பழக்கமாவதை அறிந்து கொள்ளுதல் போன்ற தலைப்புகளில் பயிற்சியாளர் இளங்கோ முத்து பயிற்சி வழங்கினார். பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் சிலம்பரசன் நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன், பள்ளிகளில் அறக்கட்டளை செயல்பாடுகளை விளக்கி, பயிற்சியின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் நிறைவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.