போச்சம்பள்ளி பகுதியில் வெண்டைக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.
போச்சம்பள்ளி பகுதியில் வெண்டைக்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள சாதி நாயக்கன்பட்டி, மேட்டுப் புலியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேல் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது. முன்பு விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.36-க்கு விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி செல்கின்றனர். தற்போது சில்லறை கடைகளில் விலையில்1கிலோ 60 விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.