உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட துணை மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 4) கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ.நகர் பகுதியில் திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். இதில் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தினார். இதில் திமுகவினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.