ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து. உயிர் தப்பிய பயணிகள். பெரம்பலூரில் இருந்து அருமடல் வழியாக திட்டக்குடி பாடர் வரை காலையில் ஓர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று இப்பேருந்து பெரம்பலூர் வர சிறுகுடல் கிராமத்தை கடந்து அருமடல் நோக்கி காலை 9;40 மணியளவில் வந்த போது அருமடல் சுடுகாடு பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை ஒட்டியே வாரியில் சாய்ந்து நின்றது. இதில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பித்தார். கிரேன் உதவியுடன் போக்குவரத்து துறையினர் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்