நடுக்கல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியம் நடுக்கல்லூர் சமுதாய நலக்கூடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.