பழமை வாய்ந்த கோவிலில் கொடை விழா
163 ஆண்டுகள் பழமை வாய்ந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்;
திருநெல்வேலி மாவட்டம் மேலகுலவணிகர்புரம் பகுதியில் 163 ஆண்டுகள் பழமை வாய்ந்த முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஆகஸ்ட் 5) கொடை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.