அதிமுக எழுச்சி பயணம் வெற்றி பெற வழிபாடு

கன்னியாகுமரி;

Update: 2025-08-06 05:24 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத களப பூஜையின் முதல் நாளில் முன்னாள் முதல்- அமைச்சரும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு உள்ளமக்களை காப்போம், தமிழ கத்தை மீட்போம்" என்ற புரட்சி பயணம் வெற்றி பெற சிறப்பு பூஜை செய்யப் பட்டது. அதன் பின்னர் அந்த அருட்பிரசாதத்தை எடப்பாடி பழனிசாமியிடம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் வழங்கினார். நிகழ்ச்சியில் கன்னியா குமரி பகவதி அனாள் முன்னாள் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தாமரை தினேஷ், ஒன்றிய பொரு ளாளர் தங்கவேல், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி பொருளாளர் பகவதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News