டூவீலர் கார் மோதல். நர்சிங் மாணவர் பலி.
உசிலம்பட்டி அருகே காரும் டூவீலரும் எதிரெதிரே மோதியதில் நர்சிங் மாணவர் பலியானார்.;
தேனி அல்லிநகரத்தை சேர்ந்த காளிதாஸ் (30) என்பவர் பாபநாசம் செல்வதற்காக உசிலம்பட்டியில் இருந்து பேரையூருக்கு காரில் வந்த போது பி.தொட்டியபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ஆதித்ய பிரவீன் (19) என்பவர் மதுரையில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். இவர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இவரது இருசக்கர வாகனமும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் ஆதித்யபிரவீன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.