உசிலம்பட்டி கண்மாய் கரையில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்.
உசிலம்பட்டியின் கண்மாய் கரை பகுதியில் உள்ள மரங்கள் தீ பிடித்து எரிந்தது.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாக உசிலம்பட்டி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து தூர்வாரி கரையை பலப்படுத்தி கரைப்பகுதியில் 100 க்கும் அதிகமான பனை மரங்கள் வேம்பு, தேக்கு, பாதாம், வாகை உள்ளிட்ட பல்வேறு நிழல் தரும் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கண்மாய் கரை பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் அவல நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று (ஆக.6)மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பரவி எரிந்து கரை பகுதியில் நட்டு வைத்திருக்கும் மரங்களிலும் பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.