தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லெப்பை குடியிருப்பு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.