அழுது கொண்டே சென்ற கொலையாளி
நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு;
நெல்லை கேடிசி நகரில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்ற ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கைதான இருவரும் இன்று நெல்லை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பொழுது கொலையாளி சுர்ஜித் அழுது கொண்டே நீதிமன்றத்திற்கு சென்றார்.