கலைஞர் நினைவு தினம்-புகலூர் நகர திமுக சார்பில் அன்னதானம் வழங்கினர்.

கலைஞர் நினைவு தினம்-புகலூர் நகர திமுக சார்பில் அன்னதானம் வழங்கினர்.;

Update: 2025-08-07 10:40 GMT
கலைஞர் நினைவு தினம்-புகலூர் நகர திமுக சார்பில் அன்னதானம் வழங்கினர். தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்களின் 7-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம் , புகலூர் நகர திமுக சார்பில் புகலிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இன்றும் புகலூர் நகர செயலாளர் சேகர் என்கிற குணசேகர் தலைமையில் 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பொதுமக்களுக்கு அன்னதானத்தை விநியோகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானத்தை உண்டு சென்றனர்.

Similar News