புகலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ.
புகலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ.;
புகலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கினார் எம் எல் ஏ இளங்கோ. கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 7 , 8 , 9 , 10 ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி காந்தியார் மண்டபத்தில் புகலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ முகாமில் அளிக்கப்பட்ட மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நலத்திட்டங்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தமிழக அரசுக்கும் எம்எல்ஏவுக்கும் நகர்மன்ற தலைவர்க்கும் நன்றி தெரிவித்தனர்.