மின் சாதனங்கள் திருடிய வடமாநில வாலிபர் பிடிப்பு : விவசாயி தடுப்புடன் மடக்கிப் பிடிப்பு !
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் மின்சார வயர்கள், மோட்டர்கள் போன்ற மின்சாதனங்கள் திருடப்படுவதற்கான புகார்கள் எழுந்து வந்தன.;
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாயத் தோட்டங்களில் மின்சார வயர்கள், மோட்டர்கள் போன்ற மின்சாதனங்கள் திருடப்படுவதற்கான புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து, புதுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி குமார், தனது தோட்டத்தில் அதிகாலை 3 மணிக்கு மின்சாதனங்கள் திருட முயன்ற வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தார். தொண்டாமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள், தொடர்ந்து நடைபெறும் இந்த திருட்டுகளை கட்டுப்படுத்த காவல்துறையும் வனத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.