உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மேற்பார்வையிட்ட எம்எல்ஏ.
மதுரை கீழவாசல் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை எம்எல்ஏ மேற்பார்வையிட்டார்.;
மதுரை மாநகர் தெற்கு தொகுதியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் முகாம் கீழவாசல் சென்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆக.8) நடைபெற்றது. இம் முகாமினை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் பார்வையிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் . முகாமில 15க்கும் மேற்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். நிகழ்வில் திமுக, மதிமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.